கிரீன்லாந்தில் ஒரே நாளில் பல தொன் பனி உருகியது

கீரின்லந்துப் பகுதியில் 24 மணி நேரத்தில் 10 பில்லியன் தொன் எடைகொண்ட பனிப்படலம் உருகியுள்ளது.

அந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்மூலம் இந்தப் பருவத்தில் கீரின்லந்தில் ஒரே நாளில் மிக அதிகமான பனி உருகிய சம்பவம் இதுவாகும்.

உருகிய பனிப்படலங்கள் ஆறாக மாறி கீரின்லந்தில் ஓடும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஐரோப்பாவின் சில பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் அனல்காற்றும் வீசி வருகிறது.

கிரீன்லாந்தின் 82 வீதமான நிலப்பகுதி பனிப்பாறைகளால் சூழ்ந்துள்ளது. ஆர்டிக் பகுதிக்கு அடுத்து உலகில் இரண்டாவது மிகப்பெரிய பனிப்படலத்தை கொண்ட பிரதேசமாக கிரீன்லாந்து உள்ளது. இந்த இரண்டு பாரிய பனிப்பிரதேசங்களும் திடீரென உருகும் பட்சத்தில் கடல் மட்டம் 65 மீற்றர் உயரும் ஆபத்து உள்ளது.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை