குப்பைகளை உரமாக்கும் நடவடிக்ைகயில் மாற்றம் தேவை

சிறந்த முறையில் உக்கும் குப்பைகளை சேகரித்து வருகின்ற போதிலும் அதனை உரமாக மாற்றும் நடவடிக்கைகளில் சிறிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

அண்மையில் பதுளை குப்பை சேகரிக்கும் நிலையம் மற்றும் பிளாஸ்டிக் மீள் சுழற்சி செய்யும் நிலையங்களை பார்வையிடுவதற்கு ஆளுநர் சென்றிருந்தார். இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர்,

இங்கு உக்கும் குப்பைகளை கொண்டு மாற்றப்பட்டுள்ள சேதப்பசளை உரத்தை பார்க்கும் போது அவற்றில் மின்கலங்களின் உதிரிபாகங்கள் காணப்படுவதாலும் பிளாஸ்டிக் சிறிய துண்டுகள் இருப்பதாலும் இவற்றை விற்பனை செய்ய முடியாதுள்ளது.

ஆகவே இதனை அகற்றுவதற்காக தேயிலை தொழிற்சாலைகளில் காணப்படும் சலிக்கும் இயந்திரத்தை போன்ற இயந்திரம் ஒன்றை இங்கு பொருத்துவதன் மூலம் சிறந்த சேதன பசளையை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை