மஞ்சி அனுசரணையில் கரப்பந்தாட்ட போட்டி தொடர்

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இணைந்து நடத்தும் ஆண்களுக்கான மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட 2019 ஆரம்ப வைபவத்தில் போது சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி நளீன் கருணாரட்னவினால் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதன் போது இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எஸ் நாலக்க, சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் சன்னாம ரொமேஷ் ஜயதிலக்க மற்றும் சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் பொது தொடர்பாடல் முகாமையாளர் ஜானக்க பொத்தேஜு ஆகியோர் கலந்து கொண்டனர். (படம்: களுத்துறை சுழற்சி நிருபர்)

Sat, 08/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை