பெருந்தோட்டங்களில் போசணை குறைப்பாட்டுக்கு மொழி பயன்பாடே காரணம்

பெருந்தோட்ட பகுதிகளில் போசணை குறைப்பாட்டுக்கு மொழி பயன்பாடுகள் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக கண்டி மாவட்ட வைத்திய பணிப்பாளர் வைத்திய நிபுணர் நிதர்சினி பெரியசாமி தெரிவித்தார். 

அரசாங்கம் சுகாதார துறையில் எத்தனையோ சமூகம் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதனை தோட்டங்களிலும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், பொது சுகாதார உத்தியத்தர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகள் என பலராலும் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் தோட்டப்பகுதியில் தான் மந்த போசணை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு காராணம் தோட்டப்பகுதியில் பாரிய அளவில் சுகாதார திட்டங்கள் முன்னெடுத்த போதிலும் அவர்களுக்கு தங்களுடைய மொழியில் வழங்கப்படாததன் காரணமாக அவை முழுமையாக சென்றடைவதில்லை. 

பெருந்தோட்டங்களில் சிறந்த போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமூக செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஹற்றன் லா எடம்ஸ் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தோட்டப்புறங்களில் சிறந்த போசாக நிகழ்ச்சி திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு அரச சார்பற்ற நிறுவனமான சேவ் த சில்ரன் நிறுவனம் நுவரெலியா, கண்டி, மாத்தளை,காலி ஆகிய 05மாவட்டங்களில் 104தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன. 

இந்த ஐந்து மாவட்டங்களிலும் 63சமூக மேம்பாட்டானர். அவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. 

சேவ்த சில்ரன் நிறுவனத்தின் செயல்திட்ட முகாமையாளரும் வைத்தியருமான வைத்தியர் ரவி வர்மாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு உதவி பணிப்பாளர் ஆரோன் ஹவுக்கின் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து பேசிய வைத்திய நிபுணர், 

தோட்டங்களில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்த போசாக்கு நிகழ்ச்சி திட்டம் காரணமாக தோட்டங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதனுடைய விளைவுகளை நாளை காண முடியாவிட்டாலும் எதிர்காலத்தில் இவற்றின் பிரதி விளைவுகள் தெரியவரும் என்றார்.   

ஹற்றன் விசேட நிருபர் 

Sat, 08/24/2019 - 08:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை