அமெரிக்கருக்கு வடகொரியா செல்வதற்கான தடை நீடிப்பு

வட கொரியப் பயணத்துக்கு அமெரிக்கக் கடவுச்சீட்டை பயன்படுத்துவதற்கான தடையை அமெரிக்க வெளியுறவு அமைச்சு மேலும் ஓராண்டுக்கு நீடித்துள்ளது. அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே அணுவாயுதக் களைவு முயற்சிகள் முடங்கிப்போயிருக்கும் சூழலில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ இந்தத் தடையை ரத்து செய்யாவிட்டால், 2020 ஓகஸ்ட் வரை அது நடப்பிலிருக்கும்.

வட கொரியா செல்வதற்கு 2017ஆம் ஆண்டு முதன்முறை தடை விதிக்கப்பட்டது. வட கொரியாவில் சிறைபிடிக்கப்பட்டிருந்த அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர் மரணத்தைத் தொடர்ந்து சென்ற ஆண்டு அந்தத் தடை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை