நியூசிலாந்தில் வாழ்ந்த இராட்சதக் கிளி

நியூஸிலந்தில் சுமார் 19 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் இராட்சதக் கிளி ஒன்று வாழ்ந்து வந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆதிகாலக் கிளி சுமார் 1 மீற்றர் உயரமிருந்ததாக நம்பப்படுகிறது. இது ஒரு மனிதனின்் உயரத்தில் சுமார் பாதி அளவாகும். பெரிய உடற்கட்டுக் கொண்ட கிளியால் பறக்க முடியவில்லை என்றும் அது பெரும்பாலும் மாமிசம் உட்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

கிளி சுமார் 7 கிலோகிராம் எடை கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

ஹெரக்லஸ் என்றழைக்கப்படும் இராட்சதக் கிளியின் எலும்புகள் கழுகு அல்லது வாத்து இனத்தைச் சேர்ந்தவை என்று முதலில் நம்பப்பட்டன.

11 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் இவ்வாண்டு சோதிக்கப்பட்ட பின்னர் அவை கிளி இனத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்தது.

நியூஸிலந்தில் இராட்சதப் பறவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இது முதல்முறை அல்ல. ஒரு காலத்தில் மோ எனப்படும் 3.6 மீற்றர் உயரமுள்ள பறவை அங்கு வாழ்ந்து வந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை