அமெரிக்காவின் ஐ.நா தூதுவர் பதவிக்கு கிராப்டுக்கு ஒப்புதல்

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் அடுத்த தூதுவராக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த கெல்லி நைட் கிராப்டின் பெயருக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது அமெரிக்காவின் கனடா நாட்டுத் தூதுவராக இருக்கும் 57 வயது நைட் கிராப், குடியரசு கட்சியின் பிரதான நிதி சேகரிப்பாளராவார். ஐ.நாவுக்கான செலவுகளை குறைக்கும் டிரம்பின் முடிவை பாதுகாத்து ஐ.நாவின் சீரமைப்புக்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் பதவி விலகிய நிக்கி ஹாலிக்கு பதிலே நைட் கிராப்ட் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நைட் கிராப்டின் நியமனத்திற்கு ஆதரவாக கொங்கிரஸில் 56 வாக்குகள் கிடைத்ததோடு 34 வாக்குகள் எதிராக பதிவாகின. அவரது நியமனத்திற்கு ஐந்து ஜனநாயக கட்சியினர் மாத்திரமே ஒப்புதல் அளித்தனர்.

போதிய அனுபவம் இன்மை மற்றும் சுரங்கத் தொழில்துறையில் அவரது குடும்பத்தின் தொடர்பு ஆகியவை கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தலாம் என்று ஜனநாயக கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை