மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு

மெக்சிகோவில் உள்ள போபோகேட்பெட்டல் எரிமலை வெடித்து சாம்பலை வெளியேற்றி வருகிறது.

அந்நாட்டின் 2ஆவது மிகப்பெரிய எரிமலையான போபோகேட்பெட்டல், நேற்று முன்தினம் திடீரென வெடித்து, பாறை துகள்கள், கரும்புகையை சுமார் 1000 மீற்றர் உயரத்துக்கு வெளியேற்றியது. வானை முட்டும் அளவுக்கு எரிமலையிலிருந்து கரும்புகை வெளியேறி காற்றில் கலந்து வரும் நிலையில், சூரிய உதயத்தின் போது அது செந்நிறத்தில் காட்சியளித்தது.

மேலும், எரிமலையின் மேற்பரப்பும் பனிபடர்ந்தது போல் வெண்ணிறத்தில் இருந்தன. எரிமலை நேற்று முதல் அவ்வப்போது எரிகுழும்புகளை வெளியேற்றி வருவதால், முன்னெச்சரிக்கையாக மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அவசர சேவை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Thu, 08/15/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக