ஐக்கியத்தை உணர்த்தும் முக்கிய தருணம்

ஜனாதிபதி ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

சவால்களும் தடைகளும் நிறைந்த இன்றைய உலகில் பரஸ்பரம் மனிதர்களுக்கிடையில் இருக்க வேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவதற்கு ஹஜ் யாத்திரை சிறந்ததோர் முன்னுதாரணமாக அமைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு

விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடரும் அவ்வாழ்த்துச் செய்தியில்

‘ஹஜ்’ என்ற சொல் ஒரு புனித பூமியை நோக்கிய யாத்திரையையே குறிக்கின்றது. உலகவாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் பங்குபற்றும் ஒரு பாரிய மத வழிபாடாகவே ஹஜ் யாத்திரை அமைகின்றது.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் இறுதிக் கடமையாகிய ஹஜ் யாத்திரையானது, உடல், உள மற்றும் பொருளாதார ரீதியில் மனதிருப்தியை அடையும் நிலையை எட்டிய ஆண், பெண் இருபாலாரும் மேற்கொள்ள வேண்டிய ஒரு மதக் கடப்பாடாகவே கருதப்படுகின்றது. நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை மற்றும் ஹஜ் யாத்திரை ஆகிய ஐம்பெரும் தூண்களின் மீது எழுந்து நிற்கும் இஸ்லாமிய மார்க்கமானது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உன்னத பிணைப்பையே எடுத்துக்காட்டுகின்றது.

சவால்களும் தடைகளும் நிறைந்த இன்றைய உலகில் பரஸ்பரம் மனிதர்களுக்கிடையில் இருக்க வேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவதற்கு ஹஜ் யாத்திரை சிறந்ததோர் முன்னுதாரணமாக அமைகின்றது என்பதே எனது எண்ணமாகும். புனித ஹஜ் யாத்திரை மூலம் சமத்துவம் பற்றிய செய்தியை சுமந்தவர்களாக ஹஜ் யாத்திரையில் பங்கேற்றோர் உட்பட நமது நாட்டிலும் உலகெங்கிலும் செறிந்துவாழும் சகல சகோதர இஸ்லாமியர்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை