பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரி மாணவிகள் சாதனை

மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக்கல்லூரி மாணவிகள் 2019 இம் முறை நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் சாதனைகளை நிலைநாட்டி தேசிய மட்டப்போட்டிகளுக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் கே.பாக்கியராசா கூறினார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 1500 மீற்றர்கள் ஓட்டப்போட்டியில் எம்.பிரியதர்சினி மாகாண மட்டத்தில் இரண்டாம் இரண்டாம் இடத்தினைப்பெற்று தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் எம்.பிரியதர்சினி மூன்றாம் இடத்தினை பெற்று தேசிய மட்டப்போட்டிக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி நிகழ்ச்சியில் வை.டிலக்சனா 20.89 மீற்றர்கள் தூரம் ஈட்டி எறிந்து மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளதோடு தேசிய மட்டப்போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான. 4 x 400 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் கே.விஜி , எம்.பிரியதர்சினி , எம்.விதுர்சா , வை.டிலக்சனா ஆகிய மாணவிகள் இத் தூரத்தினை 5.29.5 செக்கன்கள் ஓடி முடித்து மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப்பெற்று சாதனைகளை நிலை நாட்டி தேசிய மட்டப்போட்டிகளுக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் கல்லூரி அதிபர் கே.பாக்கியராசா, உடற் கல்வி ஆசிரியர் கே.சதீஸ் குமார் ஆகியோரின் அர்ப்பணிப்பும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே இம் மாணவிகளின் வெற்றிக்கும் சாதனைகளுக்கும் காரணமாகும்.

( தோப்பூர் தினகரன் நிருபர் )

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை