மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நல்லூர் ஆலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடு

இராணுவத் தளபதி

பயங்கரவாதச் செயற்பாடுகளிலிருந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு இராணுவத்திற்கே உள்ளது. இந்த அடிப்படையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு சென்றதாகவும் அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க நேற்று யாழ். நகரில் தெரிவித்தார்.  ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தவல்ல என்றும் தெரிவித்தார். யாழ். நகருக்கு நேற்று விஜயம் செய்த இராணுவத் தளபதி நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து ஆலய உற்சவகால பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இதன் பின்னர் ஆலய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகளையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்கின்றது. நல்லூர் உற்சவம் நடைபெறுவதால் ஆலயத்திற்கு வருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அந்தப் பொறுப்பு எங்களுக்கு உண்டு. இப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு உதவி செய்வதற்குமே தவிர மக்களுக்கு அசௌகரியத்தை வழங்குவதற்கு அல்ல. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பருத்தித்துறை விசேட நிருபர்

 

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை