பாப்பரசரின் ஒப்புதலுடன் சீன பாதிரியார் நியமனம்

புதிதாக எட்டப்பட்ட உடன்படிக்கை ஒன்றின்படி முதல் முறையாக சீன அரசாங்கம் மற்றும் பாப்பரசரின் ஒப்புதலுடன் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத அமைப்புகள் சீன அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்டம் வத்திக்கான் மற்றும் சீனாவுக்கு இடையில் பல தசாப்த காலமாக முறுகலை ஏற்படுத்தி வந்தது.

எனினும் கடந்த செப்டெம்பரில் எட்டப்பட்ட உடன்படிக்கையில், அரச தேவாலயங்களில் பாதிரியார்கள் நியப்பது குறித்து வத்திக்கானுடன் இணக்கம் ஏற்பட்டது.

சீனாவின் இன்னர் மங்கோலியா பிராந்தியத்தில் பாதிரியாராக யோ ஷுன் பாப்பரசரின் ஆணையை பெற்றுள்ளார். திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பாதிரியாராக அவர் முறையாக பரிசுத்தப்படுத்தப்பட்டார் என்று வத்திக்கான் பேச்சாளர் மட்டியோ ப்ருனி குறிப்பிட்டார்.

சீனாவில் வசிக்கும் சுமார் 12 மில்லியன் கத்தோலிக்கர்கள் சீனா ஆதரவு கத்தோலிக்க சம்மேளனம் மற்றும் வத்திக்கானுக்கு ஆதரவு கொண்ட இரகசிய தேவாலயங்களாக பிரிந்து உள்ளனர்.

இதில் இரகசியமாக இயங்கும் தேவாலயங்களை மாத்திரமே கடந்த பல தசாப்தங்களாக பாப்பரசர் அங்கீகரித்து வந்தார்.

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை