நிந்தவூரில் கடல் அரிப்பை தடுக்க பாதுகாப்பு சுவர்

நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடல் அரிப்பு அதிகரித்து வருவதை தடுக்க பாதுகாப்பு சுவர் அமைப்பதற்காக கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் ஆய்வு மற்றும் வடிவமைப்புப் பிரிவின் கரையோரப் பொறியியலாளர் ஆர்.ஏ.சுஜீவ ரணவக்க உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நேற்றுமுன்தினம் (17) நேரில் சென்று பார்வையிட்டார்.

கடல் அரிப்பினால் மீன்பிடி வாடிகள் பாதிப்புற்று கடல் ஊடறுத்து செல்வதினால் கரையோரத்திலுள்ள தென்னை மரங்களும் அழிந்து விடும் அபாய நிலைமை ஏற்பட்டு வருகின்றமையால் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடல் அரிப்பை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்காலிகமாக நிந்தவூர் கடற்கரையில் சுமார் 500 மீற்றர் பிரதேசத்திற்கு ஜியோ பையில் மண் மூட்டைகளினால் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கான வேலைத்திட்டம் விரைவாக ஆரம்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினரினால் ஆலோசனை வழங்கப்பட்டதுடன் மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உயர் அதிகாரிகளினால் ஒரு சில தினங்களில் ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

 

சவளக்கடை குறூப் நிருபர்

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை