செயற்கை கருத்தரிப்பில் பெற்ற மகள் சொந்தமில்லையென கண்டுபிடித்த தந்தை வழக்கு

செயற்கைக் கருத்தரிப்பு மூலம் பிறந்த மகள் தமது சொந்த மகளில்லை என்று அமெரிக்கத் தந்தை ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுக்கு முன் பிறந்த குழந்தையின் மரபணு பின்னணியைப் பற்றி அண்மையில் ஜோசப் கார்டெல்லோன் தெரிந்துகொண்டார். குடும்ப வரலாற்றைப் பற்றி மேலும் அறிய மரபணுச் சோதனையைச் செய்த போது மகள் தமக்குச் சொந்தமில்லை என்று அவருக்குத் தெரியவந்தது.

அந்தச் சோதனையை வீட்டிலேயே செய்து பார்க்க உதவும் கருவிகள் இப்போது எளிதில் கிடைக்கின்றன.

செயற்கைக் கருத்தரிப்பு செய்த மருத்துவமனை சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.

பொறுப்பற்ற முறையில் கருத்தரிப்புச் செய்தது, மனைவியின் கருமுட்டையோடு அறிமுகமற்ற ஆணின் விந்தணுவை இணைத்தது-ஆகியவற்றுக்காக மருத்துவமனை மீது கார்டெல்லோன் தம்பதி வழக்குத் தொடுத்துள்ளனர்.

இவ்வளவு காலம் தந்தை என்று நினைத்து வாழ்ந்த மகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரும் வேதனை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனது சொந்த அடையாளம் குறித்து அவர் மன அழுத்தம், குழப்பம், சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக கார்டெல்லோன் தனது வளர்ப்பு மகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை