மனிதன் அளவான பெங்குவின் உயிர் வாழ்ந்தது கண்டுபிடிப்பு

நியூசிலந்தின் தென் தீவில் மிகப்பெரிய பெங்குவின் ஒன்றின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அது கிட்டத்தட்ட முழு வளர்ச்சியடைந்த மனிதனைப் போன்று இருந்திருக்கும் என்று கூறப்பட்டது. உயிருடன் இருந்தபோது அது 1.6 மீற்றர் உயரம், 80 கிலோகிராம் எடையுடன் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய எம்பரர் பெங்குவினின் எடையைப் போன்று அது 4 மடங்கு கொண்டது என்பதோடு உயரமும் 40 சென்றிமீற்றர் அதிகமாகும்.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த அந்த இராட்சதப் பெங்குவினின் கால் எலும்புகள் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன.

பலோசின் காலக்கட்டத்தைச் சேர்ந்த அத்தகைய இராட்சதப் பெங்குவின் படிமங்கள் நியூசிலந்தில் கண்டுபிடிக்கப்பட்டது இது இரண்டாவது முறை. நியூஸிலந்தின் பல்வேறு இராட்சதப் பறவை இனங்கள் இப்போது அழிந்துபோய்விட்டன. கடந்த வாரம், கிரைஸ்ட்சர்ச் நகர அரும்பொருளகம் ஒரு மீற்றர் உயரங்கொண்ட கிளி பற்றிய தகவலை வெளியிட்டது. அந்தக் கிளி 19 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாய்க் கருதப்படுகிறது.

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை