அம்பாறை மாவட்டத்தில் பிரபல்யம் பெறும் காளான் பயிர்ச் செய்கை

அம்பாறை மாவட்டத்தில் பிரபல்யம் பெறும் காளான் பயிர்ச் செய்கை-Mushroom Cultivation in Ampara

அம்பாறை மாவட்டத்தில் காளான் பயிர்ச் செய்கை பிரபல்யம் பெற்றுவருகின்றது. அதற்கான கேள்வியும், சந்தைவாய்ப்பும் அதிகம் காணப்டுவதாகவும் அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் மத்திய நிலைய பொறுப்பு போதனாசிரியரும், பண்ணைப் பயிர்ச் செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தருமான ஏ.எச்.ஏ. முபாறக் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் பிரபல்யம் பெறும் காளான் பயிர்ச் செய்கை-Mushroom Cultivation in Ampara

புதிய உணவுக் காளான் வர்க்கம் அறிமுகமும், அதன் உற்பத்தி மற்றும் காளான் உணவு தயாரிப்பு தொடர்பிலான செய்முறைப் பயிற்சியும் அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் மத்திய நிலைய கூட்ட மண்டபத்தில் இன்று (11) நடைபெற்றது.

அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் மத்திய நிலைய பொறுப்பு போதனாசிரியரும், பண்ணைப் பயிர்ச் செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தருமான ஏ.எச்.ஏ. முபாறக் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிக் கருத்தரங்கில் மகளிர் விரிவாக்கற் பிரிவின் பாடவிதான உத்தியோகத்தர் ஜீவிதா சிந்துஜன் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

விவசாயிகள் மற்றும் பயிர்ச் செய்கைகயாளர்கள், பண்ணையாளர்களுக்கு பல்வேறுபட்ட பயிற்சிகள், வழிகாட்டல் கருத்தரங்குகள், உதவிகளை வழங்கி வரும் அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக புதிய காளான் வர்க்க அறிமுகம் மற்றும் காளான்  உணவு தயாரிப்பு பயிற்சியும் இதன் போது இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் பிரபல்யம் பெறும் காளான் பயிர்ச் செய்கை-Mushroom Cultivation in Ampara

கடந்த காலங்களில் இலங்கையில் வர்த்தக ரீதியாக ஒயிஸ்டர் காளான் மாத்திரமே பயிரிடப்பட்டு வந்தது. உயர் தரத்திலான புதிய காளான் வர்க்கத்தின் தேவை உணரப்பட்டதாலும், அதற்கான கேள்வி அதிகமாக இருந்ததனாலும் 'மாகந்துர வைட் காளான்' வர்க்கம் தற்போது விவசாயிகள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகி;ன்றது.

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கரையோர சுற்றுலாப் பிரதேசங்களான நிலாவெளி, பாசிக்குடா மற்றும் அறுகம்பை போன்ற இடங்களுக்கு அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதனால் இவ்வகைக் காளான் உணவுக்கான கேள்வி அதிகரித்து வருவதுடன் அதற்காக சிறந்த விலையும் கிடைத்துவருகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி, உகண, நீலாவணை போன்ற இடங்களில் இவ்வகைக் காளான் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் பல இடங்களில் இப்பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வின் இறுதியில் காளான் பயிர்ச் செய்கை தொடர்பான கைநூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.

(அம்பாறை சுழற்சி நிருபர் - ரி.கே. ரஹ்மதுல்லா)

Sun, 08/11/2019 - 13:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை