சுப்றா பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம்

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் அதி உயர்தரம் (சுப்றா) பரீட்சையில் அட்டாளைச்சேனை பிரதே செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளர் சேவையில் கடமையாற்றிவரும் கிருஷ்ணப்பிள்ளை சோபிதா தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளதை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (19) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர். ஏம்.ஏ.சி.எம்.நஸீல், கணக்காளர் ஏ.எல்.றிபாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.எல்.ஹூஸைனுடீன், ஏ.எம்.அஸ்லம் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.நழீல் உள்ளிட்ட காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணப்பிள்ளை சோபிதா அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இவர் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்று தான் கடமையாற்றி வரும் பிரதேச செயலகத்துக்கும், பிரதேசத்திக்கும், தாய் தந்தையினருக்கும் புகழையும், கீர்த்தியையும் பெற்றுத்தந்துள்ளதுடன், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பிரதேச செயலாளர் இதன் போது தெரிவித்தார்.

இவரது திறமையைப் பாராட்டும் முகமாக இடம்பெற்ற நிகழ்வில் காரியாலய உத்தியோகத்தர்களினால் வாழ்த்துப் பத்திரம் வாசிக்கப்பட்டு பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

(அம்பாறை சுழற்சி நிருபர்)

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை