மன்னார் வங்காலையில் ஹெரோயின் மீட்பு

மன்னார், வங்காலை பகுதியில், கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் மன்னார் பிரிவு குற்றத்தடுப்பு பிரிவு இன்று (24) அதிகாலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார், வங்காலை ​​கடற் பகுதியில் உள்ள மீன்வாடிக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 983 கிராம் கொக்கைனை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதைப் பொருளை வங்காலை பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Sat, 08/24/2019 - 09:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை