மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார் அகில தனஞ்சய

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அகில தனஞ்சயவின் பந்துவீச்சு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியிருப்பதாக இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அகில தனஞ்சயவின் பந்துவீச்சினை திமுத் கருணாரத்ன பாராட்டியுள்ளார்.

உலகக் கிண்ணத்துக்கு முதல் இலங்கை அணியின் எதிர்பார்க்கப்படும் சுழல் பந்துவீச்சாளராக அகில தனஞ்சய இருந்தார். எனினும், அவர் ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசுவதாக குற்றச்சாட்டப்பட்டதுடன், அவருக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அகில தனஞ்சய தனது பந்துவீச்சை சரிசெய்து மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான அனுமதினை பெற்றுக்கொண்டார்.

இதன்படி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அகில தனஞ்சய விளையாடினாலும், எதிரணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அவரது பந்துவீச்சு அமையவில்லை. இதனால், உலகக் கிண்ணத்துக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டு, இந்திய ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார். குறித்த தொடரில் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை அணியில் இடம்பெற்று, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இவ்வாறு, பந்துவீச்சில் மாற்றத்தை ஏற்படுத்தி, மீண்டும் அணிக்காக பிரகாசிக்கும் அகில தனஞ்சய தொடர்பில் திமுத் கருணாரத்ன குறிப்பிடுகையில்,

“அகில தனஞ்சயவின் பந்துவீச்சு பாணி சரியா? பிழையா? என்பது தொடர்பில், எனக்கு தெரியாது. ஆனால், கடந்த போட்டியில் உள ரீதியாக சிறப்பாக பந்துவீசியிருந்தார். குறிப்பாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அகில பந்துவீசியதை விடவும், இந்திய ஏ அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசிய நம்பிக்கையுடன் மீண்டும் சிறந்த பந்துவீச்சாளராக அவர் மாறியுள்ளார் என நினைக்கிறேன்” என்றார்.

Thu, 08/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை