எவரெஸ்ட் மலையேறுவதற்கு புதிய விதிகள் அறிமுகம்

எவரெஸ் மலையேறுவதற்கு மலையேற்றத்தில் அனுபவம் பெற்றிருப்பதை கட்டாயமாக்கும் புதிய விதியினை நேபாள அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரையில் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே 6,500 மீற்றர் உயரம் மலையேறிய அனுபவம் இருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அவர் உடல் தகுதி மற்றும் அனுபவம் பெற்ற வழிகாட்டி ஒருவரை பணி அமர்த்தி இருப்பதற்கான சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் எவரெஸ் மலையில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமல்போயினர்.

இதில் எவரெஸ்டின் நேபாள பக்கமாக ஒன்பது உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு திபெத் பக்கமாக இருவர் உயிரிழந்தனர். நால்வரின் உயிரிழப்புக்கு மலை உச்சியில் ஏற்பட்ட நெரிசலை காரணமாக கூறப்படுகிறது.

எவரெஸ் மலை உச்சியை ஏறுவதற்கு 35,000 டொலர் கட்டணத்தையும் மலையில் 8,000 மீற்றருக்கு மேல் ஏறும் ஏனைய மலையேறிகளுக்கு 20,000 டொலர் கட்டணத்தையும் நிர்ணயிக்க அந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

“இதன்மூலம் சட்ட ஒழுங்கில் திருத்தங்கள் செய்ய நாம் நடவடிக்கை எடுப்போம். எமது மலைகளை பாதுப்பானதாகவும், கெளரவமானதாககும் நாம் மாற்றுவோம்” என்று சுற்றுலாத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டாரி குறிப்பிட்டுள்ளார்.

உலகின் 14 உயர்ந்த மலைகளில் எட்டு நேபாளத்தில் இருப்பதோடு வெளிநாட்டு மலையேறிகள் அந்நாட்டின் பிரதான வருவாயாக உள்ளனர். நேபாள ஆலோசனை குழுவில் அரச அதிகாரிகள், மலையேற்ற நிபுணர்கள் மற்றும் மலையேற்ற சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள் உள்ளன.

11,000 டொலர்கள் செலுத்தினால் எவருக்கும் மலையேற அனுமதிக்கும் முறை பற்றி அனுபவம் பெற்ற மலையேறிகள் மற்றும் வழிகாட்டிகள் விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தப்பது.

நேபாள அரசு இந்த பருவத்தில் சாதனை எண்ணிக்கையாக 381 பேருக்கு மலையேற அனுமதி அளித்திருந்தது.

Fri, 08/16/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக