‘கிரீன்லாந்து விற்பனைக்கில்லை’ டிரம்புக்கு டென்மார்க் பதிலளிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமக்கு கிரீன்லாந்தை வாங்க விருப்பமாக இருப்பதாய் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று அதை நிர்வாகம் செய்யும் டென்மார்க் பதில் கூறியுள்ளது.

தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லந்துப் பகுதியில் பனிப்படலங்கள் உருகி கடல்மட்டம் அதிகரித்து வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் அங்கு எண்ணெய், தாதுக்கள் போன்ற இயற்கை வளங்கள் உள்ளதால் சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.

கிரீன்லாந்தில் மூன்று அனைத்துலக விமான நிலையங்களைக் கட்ட சீனா முன்வந்தது. ஆனால் அதை டென்மார்க் நிராகரித்தது.

தற்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கிரீன்லாந்தை வாங்குவது பற்றிப் பேசியதையடுத்து உலக நாடுகளின் கவனம் அதன் மேல் மீண்டும் திரும்பியுள்ளது.

ஜனாதிபதி டிரம்பின் யோசனையைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்ற போதும் ஆர்க்டிக் வட்டாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவரது நிர்வாகம் உணர்ந்திருப்பதை அது காட்டுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறினர்.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை