உணவு தயாரிப்பதில் தாமதம்: பணியாளர் சுட்டுக் கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகில் தான் கேட்ட உணவை விரைவாக தயாரித்துத் தரவில்லை என்ற கோபத்தில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு விடுதி பணியாளரை சுட்டுக் கொன்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி இருப்பதோடு இன்னும் பிடிபடவில்லை.

தோள்பட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 28 வயது உணவக பணியாளரின் உயிரை காப்பற்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராடியபோதும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனது உணவை தயாரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது குறித்து வாடிக்கையாளர் பொறுமை இழந்திருந்ததாக உணவகத்தில் பணியாற்றுபவர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கொலை உள்ளுர் மக்கள் மற்றும் கடைக்காரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் போதைப் பொருள் விற்பனை மற்றும் வீதிகளில் குடிப்பழக்கங்கள் போன்ற குற்றச் செயல்கள் நகரில் அதிகரித்திருப்பதாக ஊர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை