சுகாதார அமைச்சினால் அம்பியூலன்ஸ் வண்டிகள் கையளிப்பு

 இலவச சுகாதார சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இலகு கடனுதவியில் 100 அம்புலன்ஸ் வண்டிகளை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் ஐந்தாம் கட்டமாக 20 அம்புலன்ஸ் வண்டிகளை பிரதேச மட்ட வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்கும் வைபவம் சுகாதாரம், போஷாக்கு மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தலைமையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் கந்தளாய், கிண்ணியா, காத்தான்குடி, தெல்லிப்பழை, முல்லைத்தீவு, கெக்கிராவ, பதவிய, கல்கமுவ, கலவான, கரவனல்ல, உடுகம உள்ளிட்ட 20 வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வைபவத்தில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன வைத்தியசாலையொன்றுக்கான அம்புலன்ஸ் வண்டிக்கான ஆவணங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதையும் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், அமைச்சின் செயலாளர் உட்பட முக்கிஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை