தேசிய மொழிக் கல்வி நிறுவக ஆசிரியரையும் இரண்டாம் மொழி கற்பிக்க கோரிக்கை

அமைச்சர் மனோ கணேசனிடம் வலியுறுத்தல்

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் இரண்டாம் மொழி கற்பிக்க விரைவில் ஆசிரியர்களை நியமிக்க தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதில் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் (Nilet)பதிவு செய்துள்ள தகைமையுடைய ஆசிரியர்களையும் இந்த நிறுவகத்தின் கீழ் இரண்டாம் மொழியை கற்பித்து வருகின்ற தகைமையுடைய ஆசிரியர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் இவ்வாசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக இவர்கள் அமைச்சர் மனோ கணேசனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இரண்டாம் மொழியை அமுல்படுத்துவதற்கும் இரண்டாம் மொழியை கற்பிப்பதற்கும் அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு எடுத்து வரும் நடவடிக்கைக்கு இந்த ஆசிரியர்கள் பன்னெடும் காலமாக பல்வேறு வகையிலும் உதவியும் ஒத்துழைப்பும் வழங்கி வருகிறாார்கள்.

எனவே இவர்களில் பொருத்தமானவர்களை பாடசாலைகளில் இரண்டாம் மொழியை கற்பிக்க நியமித்தால் இவர்கள் இதுவரை காலமும் மிகவும் பற்றுடன் இரண்டாம் மொழியை கற்பிப்பதில் ஆர்வம் காட்டியதுபோல் தொடர்ந்து காட்டுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sat, 08/03/2019 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை