பிரதமரைக் காப்பாற்றும் செயற்பாட்டை கூட்டமைப்பு நிறுத்த வேண்டும்

அரசாங்கத்தைப் பாதுகாத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றவில்லை என்ற தோற்றப்பாட்டை கூட்டமைப்பினர் உடனடியாக நிறுத்த வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய அரசாங்கத்தை தாங்கள் தான் கொண்டு வந்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறிவந்தனர்.இப்போது மைத்திரி எம்மை ஏமாற்றி விட்டார் என விமர்சிக்கின்றனர், கண்டிக்கின்றனர். அவ்வாறு கண்டிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் மைத்திரி மட்டும் ஏமாற்றவில்லை ரணிலும் தான் மக்களை ஏமாற்றியுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்களில் முக்கிய இராணுவ அதிகாரியாக குறிப்பிடப்பட்டு வரும் சவேந்திர சில்வாவுக்கு இராணுவ தளபதி பதவியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.இதற்கு சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.இவ்வாறான நிலையில் இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் இராணுவ தளபதியின் நியமனம் என்பது நாட்டின் சயாதீனமான விடயம் இதில் சர்வதேச நாடுகள் தலையிடக்கூடாது என கருத்தை வெளியிட்டுள்ளார். அப்படியாயின் ரணில் நியமித்த வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார் என்றால் இராணுவ தளபதியின் நியமனத்தில் ரணிலும் மைத்திரியும் இணைந்தே நியமித்துள்ளனர்.ஆனால் கூட்டமைப்பினர் இதே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.இராணுவ தளபதியின் நியமனம் வடக்கு கிழக்கில் வாழும் மக்களை தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வழங்கப்பட்டிருக்கலாம்.இந்த அரசு மக்கள் மீது குறிப்பாக சிறுபான்மை இனம் மீது அக்கறை இல்லாது செயற்படுகின்றது என்பதையே வெளிக்காட்டுகின்றது.

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை