சாட்சியங்களை மறைத்த மருத்துவ அதிகாரிக்கு எதிராக வழக்கு

தாஜூதீனின் பிரேத பரிசோதனை

ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜூதீனின் உடலில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பிரேத பரிசோதனையில், கிடைத்த சாட்சியங்களை மாற்றியமைத்த குற்றத்தின் பேரில் முன்னாள் கொழும்பு பிரதான மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர மீது சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் 2012 மே மாதம் கொழும்பில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

இவரது மரணம் தொடர்பாக போலி தகவல் வழங்கியமை அல்லது சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் குற்றச் செயல் தண்டனை சேவையின் 198 ஆவது பிரிவின் கீழ் முன்னாள் சட்ட மருத்துவ அதிகாரி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாசிம் தாஜுதீனின் உடலில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பிரேத பரிசோதனையை பேராசிரியர் ஆனந்த சமரசேகரவே செய்ய வேண்டியிருந்தது. எனினும் அவர் அந்த பொறுப்பை அவரது கனிஷ்ட மருத்துவ அதிகாரிகள் இருவருக்கு வழங்கியிருந்ததாக சட்ட மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். அதேநேரம் மேற்படி முதலாவது பிரேத பரிசோதனையின் போது பிரதான சட்ட மருத்துவ அதிகாரியான பேராசிரியர் ஆனந்த சமரசேகர,

பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் தாஜுதீனின் உடலில் இருந்த பல்வேறு உடற்பாகங்களை அகற்றுமாறு சந்தேக நபர் கூறியமைக்குப் போதுமான சாட்சியம் இருப்பதாகவும் சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.

அத்துடன் மேற்படி உடற்பாகங்கள் தொடர்பாக சந்தேக நபர் மேலதிக விசாரணைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். அதேவேளை பேராசிரியர் சமரசேகரவின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமற் போயுள்ளதாகவும் சட்ட மா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது மட்டுமன்றி தாஜுதீனின் முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட சந்தேக நபர் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை எடுத்திருந்ததையும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.

எவ்வாறெனினும் மற்றொரு சட்ட மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பிரேத பரிசோதனையில்,தாஜுதீனின் மரணம் விபத்தால் ஏற்பட்டது அல்ல, அது ஒரு கொலை என்று தெரிய வந்தது. இதையடுத்து 2015 ஜூலை 27 ம் திகதி சி.ஐ.டி.யினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்த தகவலில் தாஜுதீனின் மரணம் விபத்தால் ஏற்பட்டதல்ல அது ஒரு கொலை என்றும் கூறப்பட்டிருந்தது.

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை