கரப்பந்தாட்ட மைதான திறப்பும் பரிசளிப்பு விழாவும்

1.5 மில்லியன் ரூபா செலவில் புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதான திறப்பு விழாவும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவும் காஸிமிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் புத்தளம் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீமின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் கரப்பந்தாட்ட மைதான அமைப்பிற்காக நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.

காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தினை திறந்து வைத்தார். புத்தளம் நகர சபை உறுப்பினர் நகுலன் , யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஐ.எம். இல்லியாஸ் , காஸிமிய்யா ட்ரஸ்ட் நிர்வாக சபை தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இல்லங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டப் சுற்றுப் போட்டியில் அம்ர் இபுனு ஆஸ் , உஸாமா பின் ஸைத் , ஹாலித் பின் வலீத் , ஸஃத் இபுனு அபீ வக்காஸ் ஆகிய நான்கு இல்லங்கள் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாடின. உத்தியோகபூர்வமாக கரப்பந்தாட்ட மைதானம் திறந்து வைக்கப்பட்டதை முன்னிட்டு நஜ்ம் , கமர் ஆகிய அணிகளுக்கிடையே போட்டியொன்றும் இடம் பெற்றது.

கரப்பந்தாட்ட மைதானம் திறப்பு விழாவை முன்னிட்டு இடம் பெற்ற போட்டியில் நஜ்ம் அணி செம்பியன் அணியாகவும் கமர் அணி ரன்னர் அப் அணியாகவும் தெரிவாகின. இல்லங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் அம்ர் இபுனு ஆஸ் இல்லம் சம்பியன் அணியாகவும் உஸாமா பின் ஸைத் இல்லம் ரன்னர் அப் அணியாகவூம் தெரிவாகின.

 ( புத்தளம் தினகரன் விசேட நிருபர் )

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை