வலைப்பாலம் வழுக்கும் நிலையில் சாரதிகளுக்கு அவதான எச்சரிக்கை

சம்மாந்துறை பிரதேச செயலக சபைக்குட்பட்ட நெய்னாகாடு, திராயோடை மற்றும் யானை விழுந்தான் ஆகியவற்றை இணைக்கும் வலைப்பாலம் வழுக்கும் நிலையில் காணப்படுவதாக வாகன சாரதிகளால் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

மஹிந்த சிந்தனையின் கீழ் தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தில் 240 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தகட்டாலான இணைப்புடன் கூடிய தொங்கு பாலம், மழை மற்றும் பனிக்காலம் உட்பட பல்வேறு காலநிலைகளின்போது வாகனங்கள் வழுக்கும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு கோலாகலமாக திறக்கப்பட்டு பயணிகள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட காலத்திலிருந்து இற்றைவரை, பல்வேறு விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட நிலையும் காணப்படுவதாக பிரதேசவாசிகளால் சுட்டிக்காட்டப்படுகிறது.

பயணிக்கும் வாகன சாரதிகள் பாலத்தின் வழுக்கும் நிலை அறிந்து வேறு பாதைகளை நாடுவதாகவும் தெரியவருகிறது. சம்மாந்துறை திகவாபி கிராமங்களை இணைக்கும் இப் பாலத்தின் அத்தியாவசிய தேவை கருதி வழுக்கும் நிலையினை குறைக்கும் நோக்கில் பாலத்தின் பாதை மீது கார்பட் இட்டுத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மண்டூர் குறூப் நிருபர்

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை