தமிழ் கூட்டமைப்பு யாருக்கும் முட்டுக்ெகாடுக்கவில்லை

புலிகளின் கோரிக்ைககளை நாம் முன்வைக்கவில்லை

பெரியபோரதீவு தினகரன் நிருபர்,

வெல்லாவெளி தினகரன் நிருபர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவருக்கும் முட்டுக் கொடுக்கவில்லை. ஓர்மையுடன் குரல் கொடுத்து தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ அடித்தளமிட்டு வருகின்றது எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் மக்கள் சந்திப்பும் கருத்தரங்கும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"எங்களுக்கு இருப்பது இரண்டு பலங்கள், ஒன்று எங்களது ஒற்றுமை, மற்றையது சர்வதேசம். ஆகவே, இவை இரண்டையும் இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

இதனைக் கொண்டுதான் விடிவை நோக்கி நகர முடியும். சமாதானச் சூழ்நிலையிலே எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என்று வரையறை இருக்கின்றது.

அதேபோன்றுதான் ஜனநாயக முறையிலே எதைச் செய்ய முடியும் எதைச் செய்யக் கூடாது என்ற வரையறை இருக்கின்றது.

தழிழீழ விடுதலைப் புலிகள் மீது இப்பொழுதும் தடை இருக்கின்றது.

அநியாயமான வேண்டுகோள்களை நாங்கள் விடுக்கவில்லை. அவர்களுக்குரியதை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்குரியதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். இது நியாயமானது.

பெரும்பான்மையினத்தவர்களை எதிர்ப்பதை விட அந்த சமூகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் ஆதரவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சிங்கள மக்கள் மத்தியிலே நாங்கள் சரியாகப் பிரசாரம் செய்யவில்லை என்ற கருத்து பரப்பப்படுகிறது. அது தவறானது. சிங்கள மக்கள் மத்தியிலே இருக்கிற முற்போக்கு சக்திகளோடு இணைந்து நாங்கள் பணியாற்றிருக்கின்றோம்.

சோபித தேரரின் முதலாவது கூட்டத்திலும் நாங்கள் பங்குபற்றி நாட்டில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எமது நியாயமான விடயங்களை எடுத்துக் கூறுவதில் முன்னின்று உழைத்தோம்.

எமது உரிமைப் போராட்ட வரலாற்றில் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்தபோது சிங்கள மக்கள் எதிர்த்தார்கள்.

ஆனால், நியாயமான அதிகாரப் பகிர்வோடு ஆட்சியதிகாரங்ளைக் கோர முடியும். இதற்கு சர்வதேச ஆதரவும் இருக்கும். தன்னுடைய சட்டங்களை, தானே அமுல்படுத்துகிற சுயாதீனம் ஒரு நாட்டுக்கு இருக்கிறது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பாலும் சென்று அர்த்தமுள்ளதாக மாற்றுவேன் என்றார் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இலங்கைக்கு ஒரு புதிய அரசியல் யாப்பு தேவை.காலக்கெடு விதித்து எதனையும் செய்ய முடியாது. அரசாங்கத்தை நாங்கள் காப்பாற்றுகின்றோம் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. ஜனநாயகப் பாதையை மீறி எதனையும் செய்வதால் எமக்காக சர்வதேச ஆதரவு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை என்றார்.

 

Tue, 08/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை