டோனியின் சாதனையை சமன் செய்யவுள்ள கோலி

அணித்தலைவராக அதிக வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனியின் சாதனையை சமன் செய்ய அவ்வணியின் தலைவர் விராட் கோலிக்கு இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆன்டிகுவா நோர்த்சவுண்ட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. இதில் வெற்றி பெற்றால் விராட் கோலி, டோனியின் சாதனையை சமன் செய்வார்.

இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக விராட் கோலி கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 46 போட்டிகளில் 26 போட்டியில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. டோனி தலைமையில் இந்திய அணி 60 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் தொடரை இழந்த போதும் முதன் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் மற்றுமொரு சாதனையை நோக்கி கோலி நகர்ந்து கொண்டிருக்கின்றார்.

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை