சர்வதேச அழுத்தம் கடும்போக்காளர்களை பலப்படுத்தும்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை போன்றவை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி அறிக்கை விட்டிருப்பது இங்கு கடும்போக்காளர்களின் கரங்களை பலப்படுத்துவதாகவே அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய இராணுவ தளபதியின் நியமனம் ஜனாதிபதியின் தனிப்பட்ட தீர்மானமாகும். இது தொடர்பில் அவர் அரசாங்கத்திடம் எந்தவித கலந்துரையாடலும் செய்யவில்லை. இதற்கு அரசு பொறுப்புக் கூறமுடியாது. சவேந்திர சில்வா

தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்திலும் பிரச்சினை இருந்த போதிலும் மஹிந்த அரசு அவரை ஐ.நா.வின் துணை பிரதிநிதியாக நியமித்திருந்தது. அப்போது அவருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியிருந்தது. தங்கள் கரங்களில் இரத்தக் கறை படிந்த மேற்குலகம் உள்நாட்டில் அப்பாவி மக்களை பழிக்கடாவாக்கும் ஒரு முயற்சியிலேயே இந்த அறிக்கைளை விட்டுக் கொண்டிருக்கின்றன. இது கடும்போக்காளர்களை உசுப்பேத்தும் காரியமாகும் என்றார்.

எம். ஏ.எம். நிலாம்

Wed, 08/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை