ஹொங்கொங்கில் மீண்டும் ஆர்ப்பாட்டம்

ஹொங்கொங்கில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் வார இறுதிப் போராட்டத்தை ஜனநாயக ஆதரவாளர்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

அந்த நகர விமான நிலையத்தில் அவர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் சர்ச்சையை எழுப்பியிருந்த நிலையிலும், போராட்டங்களை அடக்க சீன இராணுவம் ஏவப்படலாம் என்ற அச்சத்துக்கு இடையிலும் இந்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஹொங்கொங்கில் அந்த நகர அரசுக்கு எதிராக கடந்த 2 வாரங்களுக்கு மேல் நடைபெற்று வரும் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.

ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி போராடி வரும் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். சீன சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஹங் ஹாம், டே க்வா வான் ஆகிய துறைமுகப் பகுதிகள் வழியாக, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இதற்கிடையே, அந்தப் பேரணிக்கு எதிராக, அரசுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான சீன ஆதரவாளர்களும் மற்றொரு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீனக் கொடியை ஏந்தியவாறு அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்டமூலத்தை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராக ஆரம்பித்த போராட்டங்கள், 2 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை