எமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல

எமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல குமார வெல்கம-Our Candidate is Not Good Kumara Welgama

உடனடியாக கோபம் வராத, ஊடகவியலாளர்களை துன்புறுத்தாத தலைவர் வேண்டும் - குமார வெல்கம

இத்தேர்தலில் எமது வேட்பாளர் தெரிவு சரியானதல்ல என ஐ.ம.சு.மு. மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்தார்.

களுத்துறை, பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்து அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

இதில் உரையாற்றிய அவர்,

"எனது பிரதேசத்தில், மோட்டார் வாகன பாகங்களை கொண்டு வந்து பொருத்தும் தொழிற்சாலையை திறக்கும் வைபவத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்."

"அதில் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு கலந்து கொள்ள முடியாமல் போனது, தனது தம்பி ஜனாதிபதி வேட்பாளராகவுள்ளார், அவருடன் ஒரு பயணம் செல்லவிருப்பதால் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்திருந்தார்."

"அதனைத் தொடர்ந்து பிரதமர் கலந்து கொண்டு அத்தொழிற்சாலையை திறந்து வைத்தார்."

"இன்று சமூக வலைத்தளங்களில், குமார வெல்கம யூ.என்.பியுடன் இணைந்து பிரதமருடன் ஒன்றாக இருக்கிறார் என தெரிவிக்கிறார்கள்."

"இந்த வைத்தியசாலைக்கு நிதி வழங்கியதால் நானும் இக்கட்ட திறப்பு விழாவிற்கு வந்துள்ளேன். ஆனால் இன்று போடுவார்கள், நான் அமைச்சர் ராஜிதவுடன் அமர்ந்திருக்கிறேன். யூ.என்.பி. யோடு செல்லப் போகிறேன் என, நான் ஒரு சுதந்திரக் கட்சிக்காரன், நான் ஒரு பக்கமும் செல்லமாட்டேன், என் வாழ்நாள் முழுவதும், நான் சாகும் போதும் சுதந்திரக் கட்சிக்காரனாக மாத்திரமே மரணிப்பேன் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்."

"எனது மனச்சாட்சிக்கு அமைய செயற்பட எனக்கு அந்த சுதந்திரம் வேண்டும்."

"அதற்காகவே நான் விசேடமாக சொல்ல விரும்புகிறேன். இத்தேர்தலில் எமது வேட்பாளர் தெரிவு பிழையானது. இந்நாட்டின் அடுத்த தலைவர் சிறந்த ஜனநாயகத்தைக் கொண்டவராகவும், உடனடியாக கோபம் வராத தலைவராகவும், ஜனாதிபதியையும், அரசாங்கத்தை விமர்சனம் செய்யும்போது, விசேடமாக ஊடகவியலாளர்களை துன்புறுத்துபவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன்." எனத் தெரிவித்தார்.

Mon, 08/19/2019 - 22:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை