மன்னார் மறைமாவட்ட ஆயருடன் அமைச்சர் ரிஷாட் நேற்று சந்திப்பு

மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இமானுவேல் ​ெபர்னாண்டோ ஆண்டகையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (01) காலை மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.மன்னார் ஆயர் இல்லத்திற்கு நேற்று (01) காலை 8.45 மணியளவில் சென்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆயருடன் கலந்துரையாடினார்.அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன், மன்னார், மாந்தை மேற்கு,முசலி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரிஷாட், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி, இளைஞர், யுவதிகளுக்கு தொழில் நுட்ப ரீதியிலான தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை தேவைகள், மீனவர், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்பு, அதனுடைய தாக்கம் இன்னும் எல்லோருடைய உள்ளங்களிலும் வேதனையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் இம் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க, இந்து, இஸ்ஸாம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அலோசனைகளை ஆயர் முன்வைத்ததாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 மன்னார் குறூப் நிருபர்

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை