வயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்

கமநல சேவை நிலையம் அறிவிப்பு

அறுவடையின் பின்னர் வயல் வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்கு தீ வைக்கும் விவசாயிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி கமநல சேவை நிலையம் அறிவித்துள்ளது.

இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட சிறுபோகச் செய்கையின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டு அறுபது வீதமான காணிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நெல்லை அறுவடை செய்த விவசாயிகள் வயல் நிலங்களில் காணப்படுகின்ற வைக்கோலுக்கு தீ வைத்து வருகின்றனர்.

இவவாறு வயல் நிலங்களில் காணப்படுகின்ற வைக்கோலை தீ வைத்துக் கொழுத்த வேண்டாம் என பல்வேறு தடவைகள் கமநல சேவை நிலையத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்ட போதும் விவசாயிகள் வைக்கோலுக்கு தீ வைத்து வருகின்றனர்.

அறுவடை மேற்கொண்ட வயல் நிலங்களில் வைக்கோலுக்கு தீ வைக்க வேண்டாம் என்றும் அவ்வாறு தீ வைக்கும் விவசாயிகள் பற்றிய விபரங்களை கமநலசேவை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் பிரதேச கமக்கார அமைப்புக்களை கமநலசேவை நிலையம் கேட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறான விவசாயிகள் அடையாளம் காணப்படும் போது எதிர்காலத்தில் அவர்களுக்கான சகல கொடுப்பனவுகளும் நிறுத்தப்படும் என கமநலசேவை நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பரந்தன் குறூப் நிருபர்

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை