அட்டாளைச்சேனையில் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு

அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அனர்த்த முகாமைத்துவம், அபிவிருத்தி மற்றும் சமூக நல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 1500 தொண்டர் பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டு, விழிப்பூட்டல் செயலமர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.

இவ்வேலைத் திட்டத்திற்கமைய அட்டாளைச்சேனை பிரதேச மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 80 தொண்டர் பணியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி அண்மையில் இடம்பெற்றது. இப்பயிற்சி பட்டறையில் அனர்த்த முகாமைத்துவ நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.அனஸ், கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்கான மக்கள் விழிப்புணர்வுகள், அறிவூட்டல் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் கொண்டு செல்வதற்கு தொண்டர் பணியாளர்கள் தயாராக வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அம்பாறை சுழற்சி நிருபர்

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை