சு.கட்சி ஆதரவளிக்கும் வேட்பாளரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியில் எவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறமுடியாது என முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கல்நேவ பிரதேசத்திலுள்ள சங்கங்களுக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர் ,

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அவ்வட்டாரத்தில் ஒரு கட்சியின் வேட்பாளர் ஒரு வாக்கு ஏனைய கட்சி வேட்பாளர்களை விட மேலதிகமாக பெற்றாலும், வெற்றி பெறமுடியும்.ஆனால் இலங்கை முழுவதும் உள்ள அனைத்து வாக்குகளை ஒன்று சேர்த்துதான் ஒருவரினால் ஜனாதிபதியாக வரமுடியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒரு பதினைந்து இலட்சம் மக்களின் வாக்குகள் இருந்தாலும், அது ஜனாதிபதி ஒருவரை தீர்மானிக்கும் சக்தியாக அமையும்.நாட்டிற்கு பொருத்தமான நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தி நாட்டை சுபீட்ச பாதையில் வழிநடத்த கூடிய ஒருவரே நாம் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.

எமது கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாம் ஓன்று கூடி நாம் சிறந்த ஒரு தீர்மானத்தை எடுப்போம்.கட்சியின் அடிமட்ட எமது கட்சியின் உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்தே நாம் முடிவுகளை எடுப்போம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனாதிபதி பிரதமராக நியமித்த போதும், அன்றைய அமைச்சரவையிலும், இன்றைய அரசின் அமைச்சரவையிலும் நான் விரும்பியிருந்தால் விரும்பிய எந்தவொரு அமைச்சு பதவியையும் எனக்கு பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும்.என்றாலும் நாம் எமது சுய கெளரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை.பதவிகளுக்கும் ,பணத்திற்கும் சோரம் போகின்றவர்கள் நாம் அல்ல. எமது கட்சியை விட்டு ஒரு போதும் கட்சி மாற மாட்டேன்.சில நிபந்தனைகளின் பேரிலே நாம் எந்தவொரு வேட்பாளருக்கு ஆதரவளிப்போம்.நாம் யாருக்கு ஆதரவு வழங்கினாலும் அவரே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்றார்.

 

Thu, 08/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை