திருகோணமலை வௌிவாரி பட்டதாரிகள் நேற்று ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்ட வெளிவாரிப்பட்டதாரி கள் நேற்று (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

கிண்ணியா ஹில்மி சிறுவர்பூங்கா அருகில் காலை 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

"அரசை மாற்றியமைக்கும் சக்தி வெளிவாரி மாணவர்களின் கையில் " "பட்டம் பெற்றது பாதையில் நிற்பதற்கா?"

" பட்டதாரிகள் நாட்டின் சொத்து" என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இதில் கலந்து கொண்டோர் கோஷமிட்டனர்.

இப்பட்டதாரிகள் தெரிவித்ததாவது: அரசை மாற்றி அமைக்கும் சக்தி பட்டதாரிகளிடம் உள்ளது. கடந்த அரசாங்கத்தில் பாரபட்சமின்றி தொழில் வழங்கப்பட்டது.இவ்வரசில் பாரபட்சம் காட்டப்படுவது ஏன் எனவும் தெரிவித்தனர்.

சுமார் 250 மேற்பட்ட பட்டதாரிகள் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைவாய்ப்பை வெல்லும் தொடர் போராட்டத்தில் அணிவகுப்போம்! எனும் தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் போராட்ட ங்களின் தொடர்ச்சியாக இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ரொட்டவெவ குறூப்,

கிண்ணியா மத்திய நிருபர்கள்

 

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை