நல்லூர் இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (06) ஆரம்பமாகிறது. இதனைமுன்னிட்டு நேற்றையதினம் கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாய நிகழ்வு இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது.

யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நேற்று (05) காலை 9 மணிக்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து

அங்கிருந்து கொடிச்சீலை சிறிய இரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடாக எடுத்து செல்லப்பட்டு காலை 9.30 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை சென்றடைந்தது.

இன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை