நாற்பது வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.எல்.ஏ. ஜூனைத் தனது நாற்பது வருட கால கல்விச் சேவையிலிருந்து எதிர்வரும் 26 ஆம் திகதியோடு ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.

இவர் சீனிமுஹம்மது போடி கதீஜா உம்மா, மீராலெப்பை மகுமூது லெப்பை என்பவர்களுக்கு மகனாக 26-.08-.1959ம் ஆண்டு பிறந்தார். ஆரம்பக்கல்வியை வாழைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் கற்ற இவர் இடைநிலைக்கல்வியை ஓட்டமாவடி மகா வித்தியாலயம் உயர்தரக் கல்வியை வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்று வெளியேறினார்.

1984ம் ஆண்டு ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்திலும் இடமாற்றத்தை பெற்று வந்து மீண்டும் தனது சொந்த கிராமமான மீராவோடை அல்-ஹிதாயா மகாவித்தியாலயத்தில் கடமையை பொறுப்பேற்று 1989ல் இலங்கை அதிபர் சேவை போட்டிப்பரீட்சைக்குத் தோற்றி 1991ம் ஆண்டு 'இலங்கை அதிபர் சேவை- 111க்கு நியமிக்கப்பட்டார்.

2016ம் ஆண்டு ஓட்டமாவடி கோட்டத்தின் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு 2017ம் ஆண்டில் சேவை மூப்பு அடிப்படையில் கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

(வாழைச்சேனை விசேட நிருபர்)

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை