மலையக மக்களுக்கு முகவரி கொடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கின்றது

இலங்கை தேயிலை உற்பத்தியில் 150 வருட கால வரலாற்று பின்னணியை கொண்ட மலையக இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு முகவரி கொடுப்பதில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கின்றது. அதன் சேவை தொடர்ந்தும் எமதுமக்களுக்கு கிடைக்க சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனஅமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துசெய்தியிலேயே அவர்இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த செய்தியில் மேலும் தெரிவித்தாவது,

முன்னர் எப்போதும் இல்லாத அளவில் மலையக மக்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் முனைப்போடு செயற்பட்டு வருகின்றது. அதற்குமேலும் பலம் சேர்க்கும் வகையில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டம்அமைந்துள்ளது.

இந்திய அரசாங்கம் முதற்கட்டமாக வழங்கிய நான்காயிரம் தனி வீட்டுத் திட்டம்வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின்போது மலையகத்துக்கு விஜயம் செய்து எமது மக்களை நேரில் சந்தித்து மேலும் 10 ஆயிரம்வீடுகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதற்கான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தாகிஉள்ளது. விரைவில் பத்தாயிரம் வீட்டுத் திட்டப் பணிகள் ஆரம்பமாக உள்ளன. இதுமலையகத்தின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட உள்ளது.

மேலும் மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு புலமைப் பரிசில் உட்பட பாடசாலைகளின்அனைத்து அபிவிருத்திகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது. எமது பிள்ளைகள்இந்தியாவில் உயர் கல்வி பெறுவதற்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டு வருகின்றது. இலங்கைஇந்திய உறவினை மேம்படுத்த கலை,கலாசார பரிமாற்றங்களை மேற்கொண்டு வருவதோடு, மலையகமக்களின் வாழ்வாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது எனகுறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 08/17/2019 - 09:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை