வடகொரியாவின் படை வீரர் தென்கொரியாவுக்கு ஓட்டம்

வட கொரியாவைச் சேர்ந்த படை வீரர் ஒருவர் இரு கொரியாக்களுக்கும் இடையிலான இராணுவமற்ற பகுதியைக் கடந்து தென் கொரியாவுக்குள் நுழைந்ததாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.

பிடிபட்ட அந்த வீரர் தொடர்பான விபரங்களும் அதிகப் பாதுகாப்புள்ள அந்தப் பகுதியை அவர் எப்படிக் கடந்தார் என்பது பற்றிய தகவலும் வெளியிடப்படவில்லை.

கடந்த புதன் இரவு அந்த வீரர் எல்லையைக் கடந்ததாகத் தென் கொரியா தெரிவித்தது. ஆடவர் தற்போது விசாரிக்கப்படுவதாகவும் அவர் எதற்காக எல்லையைக் கடந்தார் என்பது ஆராயப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

கடந்த 65 ஆண்டுகளில் 30,000க்கும் மேற்பட்ட வட கொரியர்கள் தென் கொரியாவுக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் இராணுவமற்ற பகுதி ஊடாக எல்லையை கடப்பது மிக அபாயகரமானதும் அரிதானதுமாகும். கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த வலயத்தின் ஊடாக எல்லையைக் கடக்க முயன்ற சக வீரரை இலக்கு வைத்து வட கொரிய இராணுவத்தினர் 40 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

Fri, 08/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை