இலங்கை சுழற்பந்து வீச்சுக்கு முன் நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிவு

முன்னிலை பெற போராட்டம்

லசித் எம்புல்தெனிய முதற்கொண்டு இலங்கை அணி சுழற்பந்து வீச்சுக்கு நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் காலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.

போட்டியின் மூன்றாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் ஆட்ட நேர முடிவில் 195 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இதன்படி நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் மாத்தரமே கைவசம் இருக்க 177 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 249 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் 227 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்கு நியூசிலாந்து ஓட்டங்களை முந்துவதற்கு முடிந்தது. 39 ஓட்டங்களுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த நிரோஷன் திவெல்ல ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களை பெற்று அணிக்கு கைகொடுத்தார்.

இதன்மூலம் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் மற்றும் மத்தியுஸும் அரைச்சதம் பெற்றனர்.

இதன்போது நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வில்லியம் சமர்வில்லே 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 18 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி முக்கிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்ப வீரர் ஜீடல் படேல் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு அடுத்து வந்த அணித்தலைவர் கேன் வில்லியம்சன் (4) மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோரும் ஒற்றை இலக்கங்களுடன் வெளியேறினர். எனினும் மறுமுனையில் ஆடிய டொம் லாதம் 45 ஓட்டங்களை பெற்றார்.

அதேபோன்று மத்திய பின்வரிசையில் வொட்லிங் நியூசிலாந்து அணியின் ஓட்டங்களை அதிகரிப்பதற்கு போராடி வருகிறார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது களத்தில் இருந்த அவர் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் சாம்வில்லே 5 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இதன்போது இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய அம்புல்தெனிய 71 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும் அக்கில தனஞ்சய 1 விக்கெட்டையும் பதம்பார்த்தனர்.

இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.

Sat, 08/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை