அக்கரைப்பற்று பாடசாலைகளுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு

தெற்காசிய சகோஷன் அமைப்பினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார கழிவகற்றல் முறைமை மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு அமைய அக்கரைப்பற்று கோட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 22 பாடசாலைகளுக்கு 1000 லீட்டர் கொள்ளளவுடை நீர்த்தாங்கிகள் கையளிக்கப்பட்டன.

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் தமீம், மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹனீபா மதனி மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பிரதேச மட்டத்தில் இப்பணிக்கு பங்களிப்புச் செய்த கவிஞர் கால்தீன், எம்.வை.ஏ.அசீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். வரட்சியினால் குடிநீருக்கான தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நீரினை சேமித்து வைத்து பாவிப்பதற்கு தேவையான நீர்த்தாங்கியினை பாடசாலைகளுக்கு கொண்டு வந்திருப்பது மிகப் பெரும் பணி என வலயக் கல்விப்பணிப்பாளர் றஹ்மத்துல்லா உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் குறித்த திட்டத்தின் ஊடாக, மல கூட வசதி இல்லாத 28 பேருக்கு மல கூட வசதிகள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஹனீபா மதனி குறிப்பிட்டார்.​

ஒலுவில் மத்திய விசேட நிருபர்

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை