மூதூரில் பிரதேச சபை ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டுப் போட்டி

மூதூரில் ஹஜ்பெருநாளை முன்னிட்டு மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ. அரூஸின் ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டுப் போட்டி மூதூர் பிரதேச சபை பொழுதுபோக்கு பூங்கா மைதானத்தில் பிரதேச சபை செயலாளர் வி. சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது.

மூதூர், திருமலை, கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, தோப்பூர் பிரதேசங்களில் இருந்தும் அழை க்கப்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் சிறுவர்களை மகிழ்விக்கும் முகமாக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், சமூகநல பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டதுடன் வெற்றீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மூதூர் தினகரன் நிருபர்

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை