டெஸ்ட் நடுவர் சாதனையை சமன் செய்தார் அலீம் டார்

பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் டார் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி ஸ்டீவ் பக்னரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

2003இல் தனது நடுவர் பணியை ஆரம்பித்த டார், லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இது அவருக்கு 128 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனைப் படைத்த ஸ்டீவ் பக்னரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக அலீம் டார் 376 சர்வதேச போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இருவரையும் தவிர்த்து தென்னாபிரிக்காவின் ருடி கோயர்ட்சன் 108 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். இந்த மூன்று பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலாக நடுவராக பணியாற்றியுள்ளனர்.

Sat, 08/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை