சீன தலைநகரில் இஸ்லாமிய அடையாளங்களுக்கு தடை

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள ஹலால் உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகளில் உள்ள அரபு எழுத்துப் பலகைகள் மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை அகற்றும்படி அந்நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பிறை மற்றும் அரபு எழுத்தில் அல்லாஹ் என்ற அடையாளம் போன்ற படங்களை அகற்றும்படி அதிகாரிகள் உத்தரவிட்டதாக பீஜிங்கில் ஹலால் உற்பத்திகளை விற்பனை செய்யும் 11 உணவகங்களின் ஊழியர்கள் தெரிவித்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு நூடில்ஸ் கடை ஒன்றின் முகாமையாளரிடம் அந்த உணவகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஹலால் அடையாளத்தை அகற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருப்பதோடு அந்த அடையாளம் அகற்றப்படும் வரை அவர் அங்கேயே பார்த்து நின்றுள்ளார் என்று உணவகத்தின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

“இது வெளிநாட்டு கலாசாரம் என்றும் அதிகம் சீன கலாசாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்” என்று அந்த முகாமையாளர் ரோய்ட்டர்ஸ் இடம் தெரிவித்துள்ளார்.

20 மில்லியன் முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட சீனாவில் மத வழிபாடுகளுக்கு தடை இல்லாதபோதும் மத நம்பிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கு அரசு பிரசாரம் நடத்தி வருகிறது.

Thu, 08/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை