அமெரிக்காவுடன் இரகசிய பேச்சு: வெனிசுவேல ஜனாதிபதி ஒப்புதல்

வெனிசுவேலா மீது அமெரிக்கா தடைகளை அதிகரித்தபோதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெனிசுவேல ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுவேலாவில் இருவர் தம்மை சட்டபூர்வ ஜனாதிபதியாக அறிவித்திருக்கும் நிலையில் அந்நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நீடித்து வருகின்றன.

வெனிசுவேலாவின் சட்டபூர்வமான ஜனாதிபதியாக மடுரோவை அங்கீகரிக்காத 50க்கும் அதிகமான நாடுகளில் அமெரிக்காவும் உள்ளது.

மடுரோ பதவி விலக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா அந்நாட்டின் மீது இந்த மாத ஆரம்பத்தில் புதிய தடைகளை கொண்டுவந்தது. எனினும் டிரம்ப் நிர்வாகத்தின் சிரேஷ் அதிகாரிகளுடன் மாதகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மடுரோ கடந்த செவ்வாயன்று உறுதி செய்தார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய மடுரோ, “வெனிசுவேலாவில் நான் பேச்சுவார்த்தை நடத்துவது போன்று ஜனாதிபதி டிரம்ப் வெனிசுவேலாவை கேட்கும் வழியை நான் நாடினேன்” என்றார். வெனிசுவேலாவின் பல்வேறு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ஜனாதிபதி டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்திருந்தார்.

“யாருடன் பேசுகிறோம் என்பதை நான் கூறமாட்டேன், ஆனால் மிக உயர்மட்டத்துடன் பேசுகிறோம்” என்று டிரம்ப் குறிப்பிட்்டிருந்தார்.

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை