அம்பாறை மாவட்டத்தில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை மாவட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள தங்களது காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமென தெரிவித்து காணி உரிமையாளர்கள் கவனஈர்ப்பு போராட்டமொன்றை நேற்றுமுன்தினம் (17) அக்கரைப்பற்றில் மேற்கொண்டனர்.

மனித எழுச்சி நிறுவனம் மற்றும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி என்பன ஒன்றிணைந்து இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இங்கு காணிகளை இழந்துள்ள குடும்பங்களில் தங்கியுள்ள சுமார் 18,608 வாக்காளர்கள் தங்களின் காணி உரிமைகளை மீட்டுத்தரக்கோரி அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வாரமாக 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி உள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு இறங்கி 'நிலப்பறிப்பு இது எமது இருப்பின் மறுப்பு' எனும் தலைப்பில் பதாதைகள், போஸ்டரை பொது இடங்களில் ஒட்டி பொதுமக்களுக்கும் தலைவர்களுக்கும் விழிப்புணர்வூட்டி அழுத்தம்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

அம்பாறை சுழற்சி, ஒலுவில் விசேட நிருபர்கள்

 

 

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை