கலாநிதி பட்டம் பெற்ற அஸீம்

நிந்தவூரைச் சேர்ந்த ஏ.பி.எம்.அஸீம், வர்த்தக முகாமைத்துவத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.

நிந்தவூர் இமாம் றூமி பாடசாலையில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், உயர்கல்வியை நிந்தவூர் அல் அஷ்றக் தேசியப் பாடசாலையில் பயின்றார். பின்னர் ஆரம்ப BBA பட்டத்தை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் MBA- Operational Management, BBA,PGDP-Marketing Mgt,PGDP- Export & Import Mgt,Dip.in.HRM,NCIM,AAT பட்டங்களையும் பெற்றுள்ள இவர் வர்த்தகத்துறையில் கூடுதல் கரிசனை செலுத்தி இந்தியாவின் கன்பூர் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தினையும் பெற்றுள்ளார், இவர் மர்ஹூம்களான மரைக்கார் ஆதம்பாவா மற்றும் அலியார் பாத்தும்மா ஆகியோரின் 11 வது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை